Asianet News TamilAsianet News Tamil

இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்; மயிலாடுதுறையில் 5 மீனவர்கள் படுகாயம்

கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த 5 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 tamil nadu fishermen attacked by srilankan Navy
Author
First Published Feb 24, 2023, 9:56 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், காசி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர். அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொரையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக் கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்களுக்கு பொறையார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும காவலர்களிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சினிமா பாணியில் காரை குத்தி கிழித்த கொம்பன் யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்

கடலோர காவல்துறையை சார்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், ரவிச்சந்திரன் ஆகியோர் பொறையார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை விசாரணை மேற்கொண்டனர். மேலும் தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினர் உடன் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, துணை வட்டாட்சியர் சதீஷ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி வார்டு கவுன்சிலர்கள், தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் இருந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களையும் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios