Smuggling: நாகையில் 200 கிலோ கஞ்சா, 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல்; தனிப்படை அதிகாரிகள் அதிரடி
நாகையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்த தனிப்படை அதிகாரிகள் 200 கிலோ கஞ்சா மற்றும் 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் அடிப்படையில் கஞ்சா விற்பனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கீழையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 1)மணிராஜ் (36), த/பெ, பிரபாகரன்,திருப்பூர், 2)கௌதம் (36) த/பெ ராமசாமி, புதுக்கோட்டை 3)தட்சிணாமுர்த்தி (41) த/பெ கலியபெருமாள், விழுப்புரம். 4)சிவமுர்த்தி (38) த/பெ கலியபெருமாள், விழுப்புரம் என்ற நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சியில் அடைக்கலம் தேடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 200 கிலோ கஞ்சா மற்றும் மூன்று நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்கள். மேலும் இதுவரை இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 1200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மேலும் இது போன்ற கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.