லட்சத்தில் ஒருவரை தாக்கும் அரிய வகை நோய்; ம.பி. பெண்ணுக்கு மறு வாழ்வளித்த மதுரை அரசு மருத்துவர்கள்
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசப் பெண்ணை உயர் ரக சிகிச்சை மூலம் காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்கனி (வயது 26). கணவரின் பணி காரணமாக கடந்த 1 மாதத்திற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் இடுக்கிக்கு குடி பெயர்ந்துள்ளனார். இதனிடையே ராஜ்கனிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 20ம் தேதி ராஜ்கனிக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 10 நாட்களில் அதாவது, ஜூன் 30ம் தேதி அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 7ம் தேதி ராஜ்கனிக்கு கை, கால்கள் செயல் இழந்து போனது.
பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அவசர அவசரமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் குயில்லன் பார்ரே என்ற நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.
5 நாட்கள் வழங்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் அடிப்படையில் ராஜ்கனியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்படி மூச்சுத்திணறல் சரியாகி, கை, கால்கள் இயல்பாக செயல்படத் தொடங்கி உள்ளன. தற்போது குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனியர், ஜூனியர் பாரபட்சம் கிடையாது; 6 மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை - கோவை இளைஞன் கைது
இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கூறுகையில், அரிதான இந்நோய் சுமார் 1 லட்சம் நபர்களில் 1.2 பேருக்கு மட்டுமே வரும். உரிய நேரத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் நோயாளியை மீட்டு கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.