Asianet News TamilAsianet News Tamil

வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் அதிரடி சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கியது..!

தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று வேலம்மாள் கல்வி குழுமம். 1986-ல் இருந்து கல்வி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொன்றாக கிளை பரப்பி தற்போது சென்னை முகப்பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கரூர், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டகளில் வேலம்மாள் கல்வி குழுமம் இருந்து வருகிறது. அதேபோல், மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவங்களும், பொறியியல், மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. 5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும் வகையில் 150 ஏக்கரில் மதுரை ரிங்க ரோடு பகுதியில் உள்ள அனுப்பானடியில் வேலம்மாள் மருத்துவமனை அமைந்துள்ளது.

Velammal Group college income tax raid...Important documents seized
Author
Madurai, First Published Jan 21, 2020, 1:53 PM IST

சென்னை, மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று வேலம்மாள் கல்வி குழுமம். 1986-ல் இருந்து கல்வி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொன்றாக கிளை பரப்பி தற்போது சென்னை முகப்பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கரூர், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டகளில் வேலம்மாள் கல்வி குழுமம் இருந்து வருகிறது. அதேபோல், மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவங்களும், பொறியியல், மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. 5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும் வகையில் 150 ஏக்கரில் மதுரை ரிங்க ரோடு பகுதியில் உள்ள அனுப்பானடியில் வேலம்மாள் மருத்துவமனை அமைந்துள்ளது.

Velammal Group college income tax raid...Important documents seized

அதேபோல அவருடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் சர்தேச பள்ளி, திருமண மண்டபம் ஆகியவற்றையும் கட்டியுள்ளனர். இந்நிலையில், அதன் உரிமையாளராக முத்துராமலிங்கம் கல்வி நிறுவனங்களை தனது வாரிசுகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையை மட்டும் நிர்வாகித்து வருவதாக கூறப்படுகிறது. 

Velammal Group college income tax raid...Important documents seized

இந்நிலையில், இந்த குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கல்வி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios