மதுரை வைகை எக்ஸ்பிரஸ்க்கு இன்று 42 வது பிறந்தநாள் . அதனால் பொதுமக்கள் சார்பில் கேக் வெட்டி உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .

மதுரையில் இருந்து சென்னைக்கு முதல் பகல்நேர அதிவிரைவு ரயில் 1977 ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வைகை அதிவிரைவு வண்டி என்னும் பெயரில் தொடங்கப்பட்டது . அதில் இருந்து தொடர்ச்சியாக மக்களுக்கு இந்த ரயில் சேவை ஆற்றி வருகிறது . இன்றோடு அது தனது ஓட்டத்தை தொடங்கி 42  ஆண்டுகள் ஆகிறது .

அதன் காரணமாக  ரயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . பொதுமக்கள் ரயில் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர் . பின்னர் ரயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர் .

முதலில் 10 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை , தற்போது 24 பெட்டிகளுடன் தினமும் மதுரை முதல் சென்னை வரை சென்று வருகிறது .