நாளை முதல் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. போட்டாபோட்டிக்கொண்டு காலை முதலே குவியும் குடிமகன்கள்.!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால், மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுப்பிரியர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்: அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி காலை 10 மணி முதல்19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யவும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கடந்த 4ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மதுக்கடைகளில் இன்று மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வழக்கத்தைவிட அதிக அளவில் மது வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை காரணமாக மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் இன்று காலை முதல் மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர்.