ஒற்றை சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக காக்க வைக்கப்படுகிறோம்; மதுரையில் இலை, தழைகளுடன் பழங்குடி மக்கள் போராட்டம்

காட்டு நாயக்கன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி இலை, தழைகளுடன் மாணவிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.

tribal people protest in madurai for demanding community certificate vel

மதுரை மாநகர், வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட அந்தனேரி பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடியினர் மக்களுக்கு கடந்த 47 ஆண்டுகளாக வெவ்வேறு காலகட்டங்களில் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஏராளமான காட்டுநாயக்கன் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. 

தேர்தல் படுதோல்வியை மறைக்க எதிர்கட்சிகள் கள்ளகுறிச்சி விவகாரத்தை வைத்து வித்தை காட்டுகின்றனர் - கி.வீரமணி குற்றச்சாட்டு

மேலும் மதுரை கோட்டாட்சியர் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி காட்டுநாயக்கன் பழங்குடியினரை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் தங்களது குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளுடன் இலை தழைகளை அணிந்தவாறும், முகத்தில் கரும்புள்ளி குத்தியபடியும் நூதன முறையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடியவருக்கு உதவாமல் சட்டை பையை துழாவிய ஆசாமி; தென்காசியில் பரபரப்பு

கோட்டாச்சியரிடம் பலமுறை மனு அளித்த நிலையிலும் நிலுவையில் உள்ள ஜாதி சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என கூறி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios