ஷூ கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி... ஒலிம்பிக் கனவை அடைந்த மதுரை தமிழச்சி..!

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
 

Training on bare feet without even shoes ... Madurai Tamilachi who achieved Olympic dream ..!

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் இந்த மாதம் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இவர் சிறுவயதில் பெற்றோரை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து இந்த கனவை நிறைவேற்றியுள்ளார். 22 வயதான ரேவதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ள சூழலில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.Training on bare feet without even shoes ... Madurai Tamilachi who achieved Olympic dream ..!

இந்நிலையில் ரேவதி பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார். இதைப்பார்த்த பயிற்சியாளர் கண்ணன் அவருக்கு அவரை ஊக்குவித்து அடுத்தகட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து விடாமுயற்சியோடு படிப்படியாக முன்னேறிய அவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார்.

Training on bare feet without even shoes ... Madurai Tamilachi who achieved Olympic dream ..!

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி 400 மீட்டர்கள் மற்றும் ரிலே ஓட்டங்களில், பல தேசிய மற்றும் பல்கலைக்கழக சாதனைகளை முறியடித்து உள்ளார். தற்போது இவர் ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.ரேவதி ஷூ கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து தனது ஒலிம்பிக் கனவை அடைந்துள்ளார். பல்வேறு பெண்களுக்கு ரேவதி எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios