டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களுக்கு திமுக தான் பொறுப்பு - ஓபிஎஸ் காட்டம்

காவிரி ஆற்றில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவிரியில் பெற வேண்டிய நீரை தமிழக அரசு பெற மறுத்ததால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.

tn government should provide a compensation for farmers in delta districts says o panneerselvam

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, பட்டியலின, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமைத்தொகைக்கு ஒதுக்கி இருந்தால் அது சட்டப்படியான குற்றமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விதியை மீறி ஒதுக்கியது தவறு.

தஞ்சையில் குருவை நெல் சாகுபடி பயிர்கள் கருகி இருக்கிறது. அதற்கு முழுமையான காரணம் இன்று ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசு. ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்திலும் கர்நாடக அணையில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரகாரம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படியும் நமக்கு வழங்க வேண்டிய 16 டிஎம்சி, 32 டிஎம்சி நீரை விடுவிக்காததன் காரணமாகத்தான் தஞ்சை தரணி கருகிப் போகும் சூழல் இருக்கிறது. இதற்கு அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று அதிமுக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கணவருடன் சேர்த்து வையுங்கள்; காவல் நிலையம் அருகே தற்கொலைக்கு முயன்ற திருநங்கையால் பரபரப்பு

என்எல்சி விவகாரத்தில் பயிர்கள் அளிக்கப்பட்டதற்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க என்எல்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பாணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் கோரிக்கையாக இருக்கிறது.

அம்மா அவர்கள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007ல் பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்பு வழங்கப்பட்டது. பத்திரிகை வாயிலாக அன்று ஆண்டு கொண்டிருந்த கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி வழங்கப்படும் நீர் நமக்கு போதாது  பெற்றுள்ள தீர்பை உறுதிப்படுத்த தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கிறீர்கள். டெல்லியிலும் ஆளும் பொறுப்பில் இருக்கிறீர்கள். இந்த செல்வாக்கை பயன்படுத்தி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மத்திய அரசு அரசாணை பெற்று தர வேண்டும். 

சிறுவன் ஆசையாக குடித்த மாம்பழ ஜூஸ் பாக்கெட்டில் எலி; அதிர்ச்சியில் பெற்றோர்

அப்போதுதான் அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரும் என்று சொன்னார்கள். உடனே துரைமுருகன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வழக்காக எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று சொன்னார். ஆனால் கர்நாடகா அரசு எங்களுக்கு இந்த நீர் போதாது என்று உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அதை நீதிமன்றம் ஏற்று கூடுதலாக பெங்களூர் குடிநீருக்காக அதிகப்படியான நீரை உச்ச நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டது. 

ஆரம்பத்தில் இருந்து திமுக அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால் பயிர்கள் கருகும் சூழ்நிலை உள்ளது என்பதை அங்கிருக்கும் விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இதற்கு காரணம் திமுக அரசு. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை மத்திய, மாநிலத்தில் ஆளுகிற பொறுப்பில் இருந்த திமுக அரசு நிறைவேற்ற வில்லை. 

வனத்துறையினர் துரத்தியபோது கீழே விழுந்து ஒருவர் பலி; சோதனை சாவடிக்கு தீ வைத்ததால் பரபரப்பு

2014 இல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நான் அப்போது நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தும் நடைபெறவில்லை. இதை உச்ச நீதிமன்றம் எடுத்துச் சென்று வாதாடி போராடி இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றை மறைத்து விட்டு இன்று எங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று துரைமுருகன் சாடி இருக்கிறார். நாங்கள் அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios