உசிப்பேத்தி விட்டு ஒதுங்கிகொண்ட குருமூர்த்தி... வலுக்கும் எதிர்ப்பால் போயஸ் கார்டனில் தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் ரஜினி..!

துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார்.

thuglak 50th anniversary function... rajinikanth effigy burned by protesters

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் ரஜினியின் உருவ பொம்மையை ஆதித் தமிழர் கட்சியினர் எரித்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

thuglak 50th anniversary function... rajinikanth effigy burned by protesters

துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். 

thuglak 50th anniversary function... rajinikanth effigy burned by protesters

இந்த தகவல் முற்றிலுமாக தவறானது என ரஜினிக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ரஜினி பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என திராவிட கழக தலைவர் வீரமணி எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இதையும் படிங்க;- அடங்காமல் எரியும் துக்ளக் தீ... சூப்பர் ஸ்டாரை ரவுண்ட் கட்டும் அரசியல் கட்சிகள்... ரஜினிக்கு ஒடோடி வந்து முட்டுகொடுக்கும் எச்.ராஜா..!

thuglak 50th anniversary function... rajinikanth effigy burned by protesters

இந்நிலையில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி ரஜினியின் உருவ பொம்மையை ஆதித் தமிழர் கட்சியினர் எரித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உருவபொம்மை எரித்தவர்களை கைது செய்து வேனி அழைத்து சென்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios