Asianet News TamilAsianet News Tamil

அழகர்கோவில் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மீன்களை அள்ளிச் சென்றனர்

அழகர்கோவில் அருகே கள்ளந்திரி ஐந்துமுத்தன் கோவில் கண்மாயில் நடைபெற்ற பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகம்.

thousands of people participate at Fishing festival in madurai vel
Author
First Published Jun 1, 2024, 4:31 PM IST | Last Updated Jun 1, 2024, 4:31 PM IST

மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி, உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்துமுத்தன் கோவில் கண்மாய் உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் வேண்டுதலாக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீன் குஞ்சுகளை காணிக்கையாக வாங்கி விடுவர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கண்மாயில் அனைவரும் சமத்துவ மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர். 

ஜூன் 4 நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் - ஸ்டாலின் நம்பிக்கை

அதன்படி இன்று மீன்பிடித் திருவிழா நடைபெறும் என சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு இன்று காலை வெகு விமரிசையாக விழா நடைபெற்றது.  இதில் நத்தம், மேலூர், அலங்காநல்லூர்,  சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே காத்துக் கிடந்து கிராமப் பெரியவர்கள் வந்து வெள்ளை வீசி அனுமதி அளித்தவுடன் மீன்களை பிடிக்க துவங்கினர். 

காற்றை கிழித்து சீறிப்பாயும் பைக்குகள்; லைக்குக்காக மதுரையில் சாகசம் செய்யும் இளசுகள் - வீடியோ வெளியாகி பரபரப்பு

இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். கண்மாயில் பிடித்த மீன்களை விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளிலே சமைத்து உண்ணுவர். இது போன்று மீன்பிடி திருவிழா நடத்துவதன் மூலம் நல்ல மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios