பக்ரித் பண்டிகை: மதுரையின் பெரும்பாலான திடல்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

மதுரை மாவட்டத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

thousands of muslim people did special prayer on bakrid festival in madurai vel

ஈதுல் அல்ஹா எனும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், தமுக்கம் மைதானம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம், ஆனையூர், கலைநகர், தபால் தந்திநகர், வள்ளுவர் காலனி, சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திடல்களிலும் (திறந்தவெளி), பள்ளிவாசல்களிலும் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்; கொஞ்சும் மழலையை தவறவிட்ட சோகத்தில் கதறி துடித்த பெற்றோர்

இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில் இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு துஆ செய்தனர்.

Ariyalur Student Anitha: 1176 மதிப்பெண்கள்; 7 ஆண்டுகளுக்கு பின் அனிதாவுக்காக பொங்கும் கேரளா காங்கிரஸ்

பக்ரித் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios