Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வாய்ப்பே இல்லை... மனுதாரரை எச்சரித்த நீதிமன்றம்..!

தமிழக அரசு கடந்த 13-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி விழாவில் பொதுஇடங்ளில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து இருந்தது. அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. 
 
There is no opportunity to worship Ganesha idols...madurai high court
Author
Madurai, First Published Aug 18, 2020, 4:58 PM IST

கொரோனா பரவும் நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எவ்வாறு அனுமதி தரமுடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக அரசு கடந்த 13-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி விழாவில் பொதுஇடங்ளில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து இருந்தது. அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. 

There is no opportunity to worship Ganesha idols...madurai high court

இந்நிலையில், ராஜபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ராஜபாளையம் தர்மாபுரம் பகுதியில் 32 ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை வழங்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதால் அதற்கு அனுமதி தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். 

There is no opportunity to worship Ganesha idols...madurai high court

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் தமிழகத்தில் நாள்தோறும் 6,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை சுட்டிகாட்டினார் இந்த சூழலில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். கொரோனா பாதிப்பு இல்லையென்றால் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதில் ஏன் நீதிமன்றம் தலையீட போகிறது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுவை திரும்ப பெறாவிட்டால் மனுதாரருக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் நீதிபதி பொங்கியப்பன் எச்சரித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios