Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் எந்த உறவும் இல்லை - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த உறவுமில்லை, கூட்டணி விலகல் குறித்து அண்ணாமலை தேவையற்ற விஷயங்களை பேசிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

there is no bonding between aiadmk and bjp says former minister natham viswanathan in madurai vel
Author
First Published Feb 10, 2024, 12:14 PM IST

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, செம்மலை, ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். 

நிகழ்வில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க கூடாது என நாங்கள் முடிவெடுத்து, அதிமுகவினர் அனைவரும் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டவர் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்புளித்த பின்னரும் சிலர் நீதி கேட்க போவதாக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்த மாபெரும் புரட்சி கட்சியாக இன்று அதிமுக இருக்கிறது" என்றார்.

கல்யாண வீட்டில் மாப்பிளையாகவும், துக்க காரியத்தில் பிணமாகவும் இருக்க ஆசைப்படுபவர்  பழனிசாமி - ஓபிஎஸ் பேச்சு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், "பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தேவையற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். மத்தியில் பாஜக, காங்கிரஸ் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை" என்றார்.

புரோட்டா போட தெரிந்தவர்கள் தான் ஹோட்டல் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - மை வி3 ஆட்ஸ் நிறுவனர்

ஜெயக்குமார் பேசுகையில், "மாநிலத்தின் உரிமையை மாநில கட்சியால் தான் மீட்டெடுக்க முடியும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பேரிடர் காலங்களில் கேட்கப்பட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. சுனாமியில் இருந்து ஒக்கி புயல் வரை எந்த பேரிடரிலும் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. 1.5 லட்சம் கோடி தேசிய பேரிடர் நிதியிலிருந்து கேட்ட நிலையில், 7000 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. "என் தங்கச்சியை நாய் கடித்து விட்டது" என ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓ.பி.எஸ். பேசுவது. அவர் ஜனகராஜ் போல ஆகி விட்டார்" என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios