தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆகம முறைப்படி சமஸ்கிருதத்தில் தான் நடத்த வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தமிழ் முறைப்படி தான் குடமுழக்கை நடத்த வேண்டும் என தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சித் தலைவர் மணியரசன் மனு தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் தான் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோவிலின் குடமுழுக்கை நடத்துவதற்கு தொல்லியல் துறையில் முறையான அனுமதி பெறப்படவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான மனுக்கள் அனைத்தும் இன்று ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ் மற்றும் சமஸ்கிரதம் ஆகிய இருமொழிகளிலும் பெரிய கோவில் குடமுழக்கு நடைபெறும் என கூறியது. இதையடுத்து அது தொடர்பான பிராமண பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: இறந்தும் 6 பேரை வாழ வைத்த சுரேஷ்..! உணர்ச்சிப் பெருக்கில் உறவினர்கள்..!