இன்னும் ஒரு மாத்தில் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. அந்த நேரங்களில் சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்கியிருக்கும் மக்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்காக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கோடைகால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-நெல்லை(வண்டி எண்: 82601) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 3 மற்றும் 24-ந்தேதி, மே மாதம் 8, 22-ந்தேதிகளில் மாலை 6.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். நெல்லை-எழும்பூர்(82602) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும்.

கோழைகளே.. தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க..! வெடித்துக்குமுறும் திமுக எம்.பி..!

நாகர்கோவில்-தாம்பரம்(82624) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் இரவு 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். தாம்பரம்-நாகர்கோவில்(06035) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10, 17-ந்தேதி, மே மாதம் 1, 15, 29-ந் தேதிகளில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.