அதிகரிக்கும் கொரோனா பாசிடிவ் விகிதம்.. இந்த 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. பொதுமக்கள் பீதி..!
கோவை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. தினசரி பாதிப்பு 29,000ஐ நெருங்கி வருகிறது. ஆகையால், வேறு வழியில்லாமல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் விகிதம் தற்போது 19.3%ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாசிடிவ் விகிதம் 20.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் விகிதம் 19.5%ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனையில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதை பாசிடிவ் விகிதம் எனப்படும்.
கொரோனா பாசிடிவ் விகிதம் தொடர்ந்து உயர்வதால் கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சேலம், நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் 15ம் தேதியுடன் ஒப்பிடுகையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களில் 30-39 வயதுடையவர்களின் எண்ணிக்கை 5% உயர்ந்துள்ளது. ஆக்டிவ் கேஸ்களில் 60-69 வயதுடையவர்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 26ம் தேதியுடன் ஒப்பிடுகையில் 60-79 வயதுடையவர்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல, தற்போது சிகிச்சை பெற்று வரும் 40-49 வயதுடையவர்களின் எண்ணிக்கை 0.8% மற்றும் 0-9 வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை 1.2% சதவிகிதமும் உயர்ந்துள்ளது.