மதுரையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. பின் அரபிக்கடலில் உருவான புயலால் தமிழகத்தில் மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே வங்கக்கடலில் உருவாகியிருந்த புல்புல் கரையைக் கடந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்து வரும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் மதுரையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கோரிப்பாளையம், தமுக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல மழைநீர் தேங்கியிருந்தது. வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து யானைக்கல் கல்பாலம் மற்றும் ஒபுளாபடித்துறையில் தண்ணீர் அதிகளவு சென்றதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பிரபல தொழிலதிபர் காருடன் எரித்துக்கொலை..! திருச்சியில் பரபரப்பு..!