BREAKING பொதுமக்களே ஊழல் வாதியாக மாறிவிட்டனர்... உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை..!

ஓட்டுக்கு பணம் வாங்கி பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

public has become a plaintiff in corruption ... High Court judges torment

ஓட்டுக்கு பணம் வாங்கி பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் அக்டோபர் 31ம் தேதி அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்தார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரின் வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உண்மையை மறைத்து துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மீது கும்பகோணம் தாலுகா, கிழக்கு மற்றும் பாபநாசம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கும்கோணத்தில் ரூ.800 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும்,  இப்பணம் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமையால் கொடுத்து வைக்கப்பட்டிருந்தாக எதிர்கட்சித் தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

public has become a plaintiff in corruption ... High Court judges torment

இதிலிருந்து மே மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமை அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாக பதுக்கி வைத்திருப்பது தெரிகிறது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. நீதிமன்றத்தால் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை உருவாக்க முடியும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓட்டுக்கு பணம் வாங்கி பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர். 

public has become a plaintiff in corruption ... High Court judges torment

வாக்களாளர்கள் 10 வாக்குகள், 15 வாக்குகள் என பேரம் பேசி பணம் வாங்குகின்றனர். அடிப்படை முறையே சரியில்லை. ஒரு தொகுதிக்கு ரூ.50 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றனர். வருமானவரித்துறைக்கு தெரிந்தே கட்சிகளுக்கிடையே கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது. எனவே மாற்றம் ஒவ்வொருவரிடம் இருந்து தொடங்க வேண்டும்.  அப்போது தான் இந்த ஊழலை ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்து விரிவான உத்தரவுக்காக விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios