மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி பெருமாள் நகர் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மனைவி அகல்யா . கர்ப்பிணியான அகல்யா கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார் . 

இந்த நிலையில் பிரசவ வலி வந்ததும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் .அந்த நேரத்தில் அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது . அதனால் செவிலியர்களே பிரசவம் பார்த்து உள்ளனர் .
சிறுது நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது .

பிறந்த இரண்டு மணி நேரம் கழித்து அகல்யாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது . செய்வதறியாது திகைத்த செவிலியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பரிதாபமாக  உயிரிழந்தார் . இதனால் அதிர்ச்சியடைந்த அகல்யாவின் உறவினர்கள் மருத்துவர்கள் பணியில் இல்லாதது தான் உயிரிழப்பிற்கு காரணம் என்றும் , அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து சுகாதார துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .

என்ன விசாரணை  செய்து என்னவாகிட போகிறது .. போன உயிர் இனி திரும்பி வந்திடுமா ????