தன்னை பிரிந்து வாழும் மனைவி தனது குழந்தைகளுக்கு நடத்தும் காதணி விழாவுக்கு உறவினர்கள் செல்ல வேண்டாம் என கணவனே மதுரை முழுக்க போஸ்டர் ஒட்டிய விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மதுரை செல்லூரைச் சேர்ந்த கர்ணன் என்பவர்  கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவரது மனைவி தங்கள் குழ்ந்தைக்கு காதணி விழாவுக்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் அறிந்த அவர், மனைவி நடத்தும் காதணி விழாவில் தன்னை சார்ந்த உறவினர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில் மதுரை செல்லூர் மேல தோப்பில் வசிக்கும் கே செல்லையா தேவர் அவர்களின் மகன் சேகரன் ஆகிய நான் கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால், நானும் எனது மனைவி K.சந்தியா கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் எனது விருப்பத்திற்கு மாறாக எனது மாமியார் மாமனாரின் தூண்டுதலின் படி எனது பிள்ளைகளுக்கு வருகிற, 22ம் 5 2019 தேதி அன்று காதணி விழா ஏற்பாடு நடைபெறுகிற நிலையில், மேற்படி காதணி விழாவிற்கு எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அதனால், என்னை சார்ந்த உறவுகள் மற்றும் நான் ஏற்கனவே செய்முறை செய்த நண்பர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என இந்தப் பொது அறிவிப்பின் மூலம் அனைவரிடமும் அனைவருக்கும் தெரியப் படுத்துகிறேன் இங்கனம் மேல தோப்பு சேகரன் என அந்த போஸ்டரில் கூறியுள்ளார்.

தன்னைச் சார்ந்த உறவுகளும், தான் ஏற்கனவே செய்முறை செய்தவர்களும் அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக வைரலாகி வருகிறது.