கல்லா கட்டிய தமிழக அரசு.. ஒரே நாளில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சென்னையை அடிச்சு தூக்கிய தூங்கா நகரம்

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சென்னை - ரூ.59.28 கோடி, திருச்சி - ரூ.65.52 கோடி, சேலம் - ரூ.63.87 கோடி, மதுரை - ரூ.68.76 கோடி, கோவை - ரூ59.65 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 

Pongal festival...Liquor sales for Rs. 317 crore on yesterday

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, திருவள்ளுவர் தினமான இன்றும், ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என அடுத்தடுத்து நாளை முதல் 2 நாட்கள் விடுமுறை வருகிறது.  இதனால், டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கே மதுபானம் விற்பனை உண்டு என்பதனால், பலர் முக கவசம் அணிந்து மதுவை வாங்கி சென்றனர்.

Pongal festival...Liquor sales for Rs. 317 crore on yesterday

இந்நிலையில், தமிழகத்தில் ஜனவரி 12-ம் தேதி ரூ.155.06 கோடிக்கும், ஜனவரி 13-ம் தேதி 203.05 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றிருந்த நிலையில், பொங்கல் தினமான நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

Pongal festival...Liquor sales for Rs. 317 crore on yesterday

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில்;- பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சென்னை - ரூ.59.28  கோடி, திருச்சி - ரூ.65.52 கோடி, சேலம் - ரூ.63.87 கோடி, மதுரை - ரூ.68.76 கோடி, கோவை - ரூ59.65 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios