நிர்பயாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் பொள்ளாச்சி விவகாரத்தில் கொடுக்காதது ஏன்...? நீதிபதிகள் வேதனை..!
டெல்லி நிர்பயா வழக்கிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்திற்கு தராதது ஏன்? என தேசிய ஊடகங்களின் பாகுபாடு குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லி நிர்பயா வழக்கிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்திற்கு தராதது ஏன்? என தேசிய ஊடகங்களின் பாகுபாடு குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கஜா புயல் தொடர்பான பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கஜா புயல் சேதங்களுக்காக உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது.
அப்போது நகர்ப்புரங்களில் இருப்போர் கிராமபுரங்களை கண்டுகொள்வதில்லை. அங்கு எவ்வளவு பெரிய அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் தேசிய ஊடகங்கள் அதை கண்டுகொள்வதில்லை. மேலும் சென்னை வெள்ளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் கஜா புயல் பாதிப்பை பெரிதுப்படுத்தவில்லை.
குறிப்பாக டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அந்த சம்பவத்திற்கு உள்ளூர் ஊடகங்கள் முதல் தேதிய ஊடகங்கள் வரை முக்கியத்துவம் கொடுத்ததும், சில தொலைக்காட்சிகள், மருத்துவமனை வாசலில் நேரலை ஒளிபரப்பு செய்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் பொள்ளாச்சி விவகாரத்திற்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நீதிபதிகள் அவரது வேதனையை வெளிப்படுத்தினார்.