Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

parliament election date change...madurai high court
Author
Tamil Nadu, First Published Mar 14, 2019, 4:40 PM IST

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.  parliament election date change...madurai high court

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கோயில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது. துணை ராணுவத்தின் உதவியுடன் தேர்தலை நடத்த முடியும். மேலம் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளது. parliament election date change...madurai high court

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் பல லட்சம் பேர் கூடும் திருவிழாவை கவனத்திற்கு கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விழா காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க மக்கள் இருக்கமாட்டார்கள் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் கடமைக்காக தேர்தலை நடத்துகிறதா தேர்தல் ஆணையம்? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஆணையம் பின்வாங்கிறதா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இக்கட்டமான சூழலை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுப்பது நல்லதல்ல என்றார். parliament election date change...madurai high court

இதனையடுத்து மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாமே? என்று நீதிபதிகள் கூறினர். இது குறித்து தலைமை அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய தவறினால், தமிழக தேர்தல் அதிகாரி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios