#UnmaskingChinaசீன தாக்கியதில் பலியான பழனியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்...21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை

பழனியின் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான கடுக்கலூர் கொண்டு செல்லப்பட்டது. கிராம எல்லையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் ராணுவ மரியாதையுடன் ஊர்லவாகக் கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பழனியின் மனைவியிடம் அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிகாரிகள் வழங்கினர். இதையடுத்து பழனியின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்கு இரவில் வைக்கப்பட்டது. சோகத்தில் மூழ்கியிருந்த கிராமத்தினர் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Palani bodu burial in native place

சீனப் படையினர் தாக்கியதில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பழனியின் உடல் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.Palani bodu burial in native place
லடாக்கில் கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் தமிழகத்தில் மதுரை மாவட்டம், கடுக்கலூரை சொந்த ஊராக கொண்ட பழனி என்ற வீரரும் வீர மரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பழனியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. மதுரை விமான நிலையத்தில் கலெக்டர் டி.ஜி. வினய் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காவல் உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரும் அஞ்சலில் செலுத்தினர்.

 Palani bodu burial in native place
பின்னர் பழனியின் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான கடுக்கலூர் கொண்டு செல்லப்பட்டது. கிராம எல்லையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் ராணுவ மரியாதையுடன் ஊர்லவாகக் கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பழனியின் மனைவியிடம் அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிகாரிகள் வழங்கினர். இதையடுத்து பழனியின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்கு இரவில் வைக்கப்பட்டது. சோகத்தில் மூழ்கியிருந்த கிராமத்தினர் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Palani bodu burial in native place
இன்று காலை பழனிக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழக வீரர் பழனியின் உடலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios