Asianet News TamilAsianet News Tamil

“காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல்” உறுதி மொழியுடன் தொடங்கிய பாலமேடு ஜல்லிகட்டு

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் இன்று காலை விமரிசையாகத் தொடங்கியது. மொத்தமாக 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் அதிகமான காளைகளும் பங்கேற்க உள்ளன.

palamedu jallikattu started at morning with pledge
Author
First Published Jan 16, 2023, 8:18 AM IST

தமிழர் திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்கு அதிகாரிகளின் பாதுகாப்போடு வீரர்கள் உறுதி மொழி ஏற்க அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை..! தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற இபிஎஸ்-ஓபிஎஸ்..! யார் யார் பங்கேற்கிறார்கள்..?

இன்று நடைபெறும் போட்டியில் மொத்தமாக 335 மாடு பிடி வீரர்களும், 800க்கும் அதிகமான காளைகளும் பங்கேற்க உள்ளன. போட்டியில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் வீரர்களுக்கு வழங்குவதற்காக சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், பீரோ, அண்டா உள்ளிட்டப் பரிசுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காதலன் கண்ணெதிரே பலியான காதலி… சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்!!

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக “மதுரை மாவட்டம், வாப்பட்டி வட்டம், பாலமேடு கிராமத்தில் 16.01.2023 அன்று தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாசாலத்தையும், பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம்” என மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க அதனை வீரர்கள் வழிமொழிந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios