மொத்தமும் போச்சு... ஆன்லைன் டாஸ்டாக் விற்பனைக்கும் ஆப்பு.? தமிழக அரசை கேள்வியால் புரட்டி எடுத்த நீதிமன்றம்.!

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Online sales tasmac case...madurai high court question

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மதுரையை சேர்ந்த பொனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் டாஸ்மாக் எதிராக மனுவை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தற்போது உலகத்தையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை பல லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

Online sales tasmac case...madurai high court question

இதனிடையே, தமிழக அரசு கடந்த 7ம் தேதி டாஸ்டாக்  கடை திறந்து விற்பனை செய்துள்ளது. இது முற்றிலும் ஊரடங்குக்கு எதிரானது. மேலும், மது அருந்தினால் கொரோனா நோயின் தாக்கம் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனால், எதனையும் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை வணிக நோக்கத்துடன் திறந்துள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு இதுவரை எந்த தடுப்பூசி மற்றும் மருத்துகளோ கண்டுபிடிக்கவில்லை.

இதற்கு ஒரே தடுப்பு மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலே. அதிகரிப்பு செய்வது மட்டும் தான். ஆனால், இதுபோன்ற மதுபான கடைகள் திறப்பதால் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீரை தமிழகமெங்கும் வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதேவேலையில், இதற்கு முரண்பாடாக டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவித்திருந்தார். 

Online sales tasmac case...madurai high court question

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய முதல் கேள்வியே தமிழக அரசு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீரை தமிழகமெங்கும் விநியோகித்து கொண்டிருப்பதை நாங்கள் தினமும் அறிகிறோம். ஆனால், அதேநேரத்தில் இதுபோன்ற மதுபான கடைகளை திறப்பதனால் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இது என்ன முரண்பாடான விஷயமாக உள்ளதே என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

Online sales tasmac case...madurai high court question

இதுதொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் தருவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாட வேண்டும் என கால அவகாசம் கோரியிருந்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கின் முக்கிய சராம்சம் மதுக்கடைகளை திறக்கக்கூடாது. குறிப்பாக ஆன்லைனில் கூட விற்பனை அனுமதிக்கக்கூடாது. கொரோனா பாதிப்பு மூடியும் வரை எந்த வகையான மது விற்பனைக்கும் அனுமதியும் வழங்கக்கூடாது என்பது தான். எனவே இது தொடர்பாக வழக்கில் இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios