Asianet News TamilAsianet News Tamil

மதுரை சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரியால் கோர விபத்து; ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

மதுரையில் சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர்.

One person killed and 2 persons highly injured while lorry accident in madurai district
Author
First Published Jul 31, 2023, 9:16 AM IST | Last Updated Jul 31, 2023, 9:16 AM IST

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று வழக்கம்போல் வாகனங்கள் பரபரப்பாக கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட்டில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில், டோல்கேட்டில் இருந்த கட்டண வசூல் மையம் சேதமடைந்த நிலையில் அங்கு பணியில் இருந்த சதீஷ்குமார் என்ற ஊழியர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தறிகட்டி சென்ற லாரி மோதி ஆம்னி வாகனத்தில் வந்தவர்கள் இரண்டு பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உல்லாசத்துக்கு அழைத்த தம்பி மகன்.. இணங்க மறுத்த அத்தையை போட்டுத்தள்ளிய சம்பவம் - சென்னையில் அதிர்ச்சி

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios