வைகை அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
தொடர் மழை காரணமாக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையொட்டி, அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70.01 ஆக உள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே அற்றில் திறந்துவிடப்படுகிறது. நேற்று அணையிலிருந்து வினாடிக்கு 1,269 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 2320 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் படிக்க:டெல்டா மாவட்டங்களில் 3 வது நாளாக தொடரும் கனமழை.. 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின..
அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிக்கரிக்கக்கூடும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க:இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்..