11 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்த நிர்மலாதேவி... வாய் திறக்க கட்டுப்பாடு..!

11 மாத சிறைவாசத்துக்குப் பின் மதுரை மத்திய சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் இன்று வெளியே வந்தார். 

nirmaladevi released...madurai central prison

11 மாத சிறைவாசத்துக்குப் பின் மதுரை மத்திய சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் இன்று வெளியே வந்தார்.  

அருப்புக்கோட்டையில் உள்ள தனியால் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தி சென்றதாக  வெளியான ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியு்ளளது. இதனையடுத்து இது தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். nirmaladevi released...madurai central prison

பின்னர் கருப்பசாமி, மற்றும் முருகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் கிடைத்து வெளியே வந்தனர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது ஏராளமான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படும் போது நிர்மலாதேவிக்கு ஒரு வருடமாகியும் ஜாமீன் ஏன் வழங்கப்படவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். nirmaladevi released...madurai central prison

இதற்கு அரசு தரப்பில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வாங்குவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவி்த்தார். இதனையடுத்து மார்ச் 12-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது. ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையிலும், அவருக்கு உறவினர்கள் யாரும் ஜாமீன் கையெழுத்து போட முன்வராததால், அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியாத சூழல் இருந்தது. nirmaladevi released...madurai central prison

இந்நிலையில் நிர்மலா தேவியின் மூத்த அண்ணன் ரவி மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் ஜாமீன் கொடுத்து கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து ஜாமீன் கிடைத்தும் 10 நாட்களுக்கு நிர்மலா தேவி விடுதலையாகியுள்ளார். அரசியலின் சதி காரணமாக 11 மாதங்களாக சிறையில் நிர்மலா தேவி இருந்ததாக வழக்கறிஞர் கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios