Asianet News TamilAsianet News Tamil

ஜாமீன் கிடைத்தும் நிர்மலாதேவி வெளியே வருவதில் சிக்கல்...!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

nirmaladevi bail but not release
Author
Tamil Nadu, First Published Mar 13, 2019, 11:06 AM IST

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அருப்புக்கோட்டையில் உள்ள தனியால் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தி சென்றதாக  வெளியான ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியு்ளளது. இதனையடுத்து இது தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். nirmaladevi bail but not release

பின்னர் கருப்பசாமி, மற்றும் முருகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் கிடைத்து வெளியே வந்தனர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதுிமன்றத்தில் நிர்மலா தேவி ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது ஏராளமான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படும் போது நிர்மலாதேவிக்கு ஒரு வருடமாகியும்  ஜாமீன் ஏன் வழங்கப்படவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். nirmaladevi bail but not release

இதற்கு அரசு தரப்பில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வாங்குவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவி்த்தார். இதனையடுத்து நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. nirmaladevi bail but not release

இன்று அவர் ஜாமீனில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜாமீன்தாரார்களாக பொறுப்பேற்று நிர்மலாதேவியை அழைத்து செல்ல உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. மேலும் தொடர்ந்து நிர்மலாதேவியின் உறவினர்களிடம் பேசி வருவதாகவும் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios