Asianet News TamilAsianet News Tamil

வாகன ஓட்டிகளே உஷார் ! இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம் ! பல மடங்கு கூடுதல் அபராதம் !!

கடந்த மாதம் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, அதில் பெரும்பாலானவை செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

New motor vechile act implement tonight in Tamil nadu
Author
Madurai, First Published Aug 31, 2019, 8:20 PM IST

நாடாளுமன்றத்தில் அண்ணைமயில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. போக்கு வரத்து விதிமீறல்களுக்கு இது வரை விதிக்கப்பட்ட அபராதத்தைவிட தற்போது பல மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, அதில் பெரும்பாலானவை செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

New motor vechile act implement tonight in Tamil nadu

சாலை விதிமீறல்கள் குறித்து புதிய மோட்டார் வாகன சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. 

1. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான அபராதம் ரூ .200 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2. உரிமம் இல்லாமல் வாகனம் பயன்படுத்தினால் ரூ .5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
3. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ரூ .500 ஆக இருந்த அபராதம் இனி ரூ .5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்
4. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர்களாக இருந்தால் ரூ .1,000 வரையும், நடுத்தர பயணிகள் அல்லது பொருட்கள் வாகனங்களுக்கு ரூ .4,000 வரை வசூலிக்கப்படும்.
5. அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுவதற்கான தண்டனையாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ .10,000 வரை அபராதம் விதிக்க முடியுமாம்.New motor vechile act implement tonight in Tamil nadu
6. வாகனம் ஓட்டுவதற்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட ஓட்டுநர்களுக்கு முதல் முறை ரூ .1000 வரையிலும், இரண்டாவது முறை என்றால், ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
7. விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் / 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
9. காப்பீடு இல்லாத வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ .1,000 மற்றும்/அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ .2,000 அபராதம் விதிக்கப்படும். இண்டாவது முறை இதே குற்றம் செய்தால் அபராதம் ரூ .4,000 மற்றும் / அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
10. சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் ரூ .25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறார் 25 வயது ஆகும்வரை, எல்.எல். கூட வாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.
11. லேனர் லைசென்ஸ் விண்ணப்பதாரர்கள் மாநிலத்தில் உள்ள எந்தவொரு உரிம அதிகாரத்திற்கும் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்பட்டது.

New motor vechile act implement tonight in Tamil nadu
12. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், உரிமம், காலாவதியாகும் ஒரு வருடம் முன்போ, காலாவதியாகி ஒரு வருடத்திற்கு உள்ளோ எந்த நேரத்திலும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் காலாவதியான நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து புதுப்பிக்க விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர் மீண்டும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

என்பன போன்ற பல புதிய மோட்டார் வாகன சட்டங்கள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios