நீதிபதியை எதிர்த்து பேசியதால் ஜெயில்... விடுதலை செய்யப்பட்டார் நந்தினி..!

நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையிலடைக்கப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 

Nandini was released

நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையிலடைக்கப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். Nandini was released

மதுஒழிப்பை முன்னெடுத்து தொடர்ந்து போராடி வந்த வழக்கறிஞர் நந்தினி. பல மதுஒழிப்பு போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 27ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார்.

Nandini was released

இதனால் அவர்மீதும், அவரது தந்தைமீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவருக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரும், அவரது தந்தையும் சிறையில் இருந்ததால் திருமணம் நின்றுபோனது. ஜூலை 9ம் தேதி வரை அவர்களை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமின் வழங்கி திருப்பத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios