பழமுதிர்சோலை முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு… வெள்ளி கதவுகள் செய்யும் பணி தொடங்கி வைப்பு!!
மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கதவுகள் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கதவுகள் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: திராவிட மாடல் என்பது தமிழே கிடையாதா? தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுவது என்ன?
பின்னர் கோயிலை ஆய்வு செய்த அவர்கள், கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பழமுதிர்சோலையில் உள்ள முருகன் சந்நிதி மற்றும் பிற தெய்வங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கதவுகள் செய்யும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: இ.பி. முதல்வராக பொறுப்பேற்றார் சுக்விந்தர்சிங் சுக்கு... பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து!!
முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வரும், மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் தூண்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தியுடன் சேர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.