Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் தம்பியின் நியமனம் செல்லாது... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தேனி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தலைவராக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்களையில் தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.ராஜா நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

milk society chief o raja appointment cancelled...madurai high court
Author
Madurai, First Published Jan 23, 2020, 12:06 PM IST

தேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தலைவராக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்களையில் தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.ராஜா நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நான் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது.

milk society chief o raja appointment cancelled...madurai high court

அந்த கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தலைவர் மற்றும் நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய 17 உறுப்பினர்கள் தேவை என்பதால், மேலும் 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அன்று பதவியேற்றனர்.

milk society chief o raja appointment cancelled...madurai high court

தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். எனவே தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், "17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது, எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்திருந்தனர்.

milk society chief o raja appointment cancelled...madurai high court

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு ஆவினின் விதிப்படி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால், தற்போது தேனி மாவட்ட ஆவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளனர். மேலும், ஆவின் ஆணையர் விதிகளை பின்பற்றி தற்காலிக குழுவையோ, நிரந்தர குழுவையோ அமைப்பது குறித்து முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios