தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார் . அதன்படி முதலில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்தார் . பின்னர் கடந்த மாதம் திருநெல்வேலியில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாகவும் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .

சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்தார் . இன்னும் பல பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது .

இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார் . 

இன்று உசிலம்பட்டியில்  முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் பங்கேற்று 27 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை இல்லை என்று தெரிவித்தார் .