வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது; நவீன கருவியுடன் களமிரங்கும் காவல்துறை
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளை துள்ளியமாக பரிசோதனை செய்ய அதிநவீன பிரீத் அனலைசர் கருவியை முதல்முறையாக மதுரை போக்குவரத்துக் காவல் துறையினர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
மக்கள் தொகை அதிரிப்பின் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் சாலையில் உலா வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க சாலை விபத்துகளும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒருசிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்களை கண்டறிய தமிழக போக்குவரத்துக் காவல் துறையினர் குறிப்பிட்ட கருவியை பயன்படுத்துகின்றனர். அந்த கருவியில் ஓட்டுநர் ஊதும் போது மது அருந்தியுள்ளாரா? இல்லையா? என கண்டறிய முடியும். ஆனால் ஒருசிலர் இந்த பரிசோதனைக்கு ஒப்புக் கொள்வது கிடையாது.
பெட்ரோல் திருட்டு? வலிப்பு வந்தபோதும் வடமாநில இளைஞரை தாக்கிய பொதுமக்கள்
அப்படிப்பட்ட நிலையில் காவல் துறையினர் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை தவிர்க்கும் விதமாக மதுரை போக்குவரத்துக் காவல் துறையினர் தமிழகத்தில் முதல் முறையாக பிரீத் அனலைசர் (Breath Analyser) என்ற அதிநவீன கருவியை இன்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நன்றி சொல்வதற்காக விமானத்தில் இருந்து குதித்த டாம் குரூஸ்
ஓட்டுநர் பரிசோதனைக்கு சம்மதிக்காத பட்சத்தில் இந்த கருவியை அவர் முகம் அருகே கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா? இல்லையா? என்று எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கருவியில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால் குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரமும் உடனடியாக கிடைத்துவிடும் எனவே இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.