மதுரையில் சுங்கச்சாவடியில் கட்டணத் தகராறின்போது காரில் வந்தவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இன்று மதியம் காரில் வந்த நபர், சுங்கச்சாவடி கட்டணம் கட்ட மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரை ஊழியர்களே மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் யாருக்கும் காயம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.