Asianet News TamilAsianet News Tamil

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை தெய்வானை இடமாற்றம்; எதற்காக?

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலைச் சேர்ந்த தெய்வானை யானை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

Madurai Thiruparankundram Murugan temple Deivanai elephant moved to Pollachi forest range
Author
First Published Apr 15, 2023, 12:40 PM IST

பெண் யானையான தெய்வானைக்கு வயது 15. இந்த யானை இரண்டு மாதங்களுக்கு இந்த வனச் சரகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படும். இந்த யானை தொடர்ந்து முரட்டுத்தனமாக செயல்பட்டு வந்த காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில்  யானைப் பாகனை இந்த யானை கொன்றது. 

இதையடுத்து இந்த யானை எம்ஆர் பாளையம் யானை மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும், பராமரிப்பாளரை தாக்கியது. ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் கோவிலுக்கு யானை திரும்ப அனுப்பப்பட்டது. மீண்டும் கோவிலில் பராமரிப்பாளரை தாக்கியது. 

இந்த நிலையில், யானையை பொள்ளாச்சிக்கு ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கோவில் நிர்வாகம் பரிந்துரை செய்து இருந்தது. இதையடுத்து, 2022 நவம்பர் மாதம் யானையை பொள்ளாச்சி அனுப்புவதற்கு வனவிலங்குகள் தலைமை வார்டன் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை யானைக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

மேடநாடு மலையைக் குடைந்து ரோடு! சுற்றுலாத்துறை அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்

இதையடுத்து தெய்வானை யானையை தொடர்ந்து கண்காணித்து பத்து மாதங்களுக்குப் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருக்கு ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி  கடிதம் எழுதி இருக்கிறார். 

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்சுக்கு மதுரை மாவட்ட வன அதிகாரி டி. குருசாமி தெரிவித்து இருக்கும் செய்தியில், யானையை ஓராண்டுக்கு கவனித்துக் கொள்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு பது லட்சம் ரூபாய் அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த யானையுடன் வழக்கமாக அமர்த்தப்பட்டு இருக்கும் ஒரு பாகனுடன். மேலும் இருவர் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தற்போது சர்கார்பதி வனப்பகுதியில் யானை வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார் கூறி அலறவிட்ட நிர்வாகி.. பாஜக எடுத்த அதிரடி முடிவு..!

Follow Us:
Download App:
  • android
  • ios