தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம்; தமிழகத்தில் 3வது இடம்!

மாநிலங்கள் அடிப்படையிலான உணவுப் பாதுகாப்பு தரவரிசையில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த தமிழ்நாடு இம்முறை மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Madurai ranks nine in national food safety index, 3rd in Tamilnadu

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை, உணவுப் பாதுகாப்புக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் முதல் 75 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மதுரைக்கு ஒன்பதாவது இடத்தை வழங்கியுள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலுக்காக நாட்டின் அனைத்து மாவட்டங்களும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) மதிப்பீடு செய்யப்பட்டன. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற 22 மாவட்டங்களில் மதுரை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில தரவரிசையில் கோவை முதலிடத்தைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலங்கள் அடிப்படையிலான தரவரிசையில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த தமிழகம் இம்முறை மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மதிப்பீட்டின்போது 200 மதிப்பெண்களுக்கு மொத்தம் 177 மதிப்பெண்களை மதுரை பெற்றுள்ளது.

நீ சின்ன பையன், என்னை மறந்துரு... கழற்றிவிட்ட காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற சிறுவன்

Madurai ranks nine in national food safety index, 3rd in Tamilnadu

கடந்த ஆண்டு தேசிய தரவரிசையில் 42வது இடத்திலும், மாநில தரவரிசையில் 8வது இடத்திலும் இருந்த மதுரை இந்த முறை தேசிய அளவில் 9வது இடத்துக்கும், மாநில அளவில் 3வது இடத்திற்கும் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

"தெருவோர வியாபாரிகள் மற்றும் உணவகங்களுக்கு உரிமம் வழங்குதல், உணவுப் பரிசோதனைக்கான உணவு மாதிரிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தாக்கல் செய்த அதிக வருமானம், கோயில்களில் சுகாதாரமான பிரசாதம் வழங்கப்படுவதற்கான சான்றிதழ் மற்றும் ஹோட்டல்களுக்கான சரியான சுகாதார மதிப்பீடு ஆகியவை மதுரை உணவு பாதுகாப்பு தரவரிசையில் முன்னேற்றம் கண்டதற்குக் காரணம்" என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் சொல்கிறார்.

கடந்த ஓராண்டில் மீனாட்சி அம்மன் கோயில் உள்பட 29 கோயில்களுக்கு சுகாதாரமான பிரசாதத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்துள்ளது. கோவில்களில் உணவுகளை சுகாதாரமாக பராமரிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் 35 வளாகங்கள் ஆணையத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளன.

மகாராஜா கல்லூரி முறைகேட்டை ரிப்போர்ட் செய்த ஏசியாநெட் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது வழக்குப்பதிவு

Madurai ranks nine in national food safety index, 3rd in Tamilnadu

"சமீபத்தில், அண்ணாநகர் உழவர் சந்தை உணவு உரிமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பி பி குளம் மற்றும் அன்னையூர் சந்தைகள் அதற்கான செயல்பாட்டில் உள்ளன" எனவும் ஜெயராம பாண்டியன் கூறுகிறார். 10 அங்கன்வாடி மையங்கள், மதுரை மத்திய சிறைச்சாலை ஆகியவையும் சான்றிதழ் பெற்றுள்ளன.

மாநிலங்கள் தரவரிசையில் கேரளா இந்த முறை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து 13 மாவட்டங்கள் முதல் 75 இடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பான் தூதர் பகிர்ந்த வீடியோ... மனைவியிடம் தோல்வி அடைந்ததற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios