ஊரடங்கில் அநாவசியமாக வெளியே சுற்றினால் ஆப்பு... காவல்துறை கடும் எச்சரிக்கை...!

இந்நிலையில் மதுரை மக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

Madurai police warns people who are came out from house without any reason

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி மக்கள் அன்றாடம் வெளியே செல்வதையும் 12 மணி வரை ஊர் சுற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Madurai police warns people who are came out from house without any reason

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மதுரை மக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

Madurai police warns people who are came out from house without any reason

அதன்படி, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தினமும் வீட்டை வெளியே வரக்கூடாது என்றும், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. காய்கறிகளை வீட்டினருகே உள்ள தற்காலிக சந்தைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Madurai police warns people who are came out from house without any reason

தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இயங்கும் கடைகள் மூடப்பட்டும் என்றும் மதுரை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios