மதுரை மெட்ரோ : விளக்க அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ரூ.1.3 கோடிக்கு கைப்பற்றியது RV அசோசியேட்ஸ் நிறுவனம்
Madurai Metro : மதுரை மெட்ரோ ரயில் திட்டபணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்திற்கு ரூ.1.3 கோடி ரூபாய்க்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அண்மையில் தமிழக பட்ஜெட்டி 8500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு 20 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 4 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், 1.35 கோடிக்கு ஆர்வி அசோசியேட் நிறுவனம் டென்டரை கைப்பற்றியது. இதன் மூலம், விரைவில் மதுரை மாநகர் மக்களுக்கான போக்குவரத்து பயன்பாடு, நிலத்தேவைகள், வழித்தட அமைப்பு, மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஊழல்.. பகீர் கிளப்பிய எடப்பாடி.! உண்மையா.? பிடிஆர் சொன்ன விளக்கம்
விரிவான திட்ட அறிக்கையின் கீழ் 20 நிலையங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. அவை, திருமங்கலம், கப்பலூர், சுங்கச்சாவடி, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தநகர், மதுரை கல்லூரி, மதுரை ஜங்ஷன், சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், காவல் ஆணையர் அலுவலகம், கே.புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, மதுரை நீதிமன்றம் மற்றும் ஒத்தக்கடை.