மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம்  சாதி ரீதியாக ஒருமையில் பேசியுள்ளார். 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாக வராலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம் சாதி ரீதியாக ஒருமையில் பேசியுள்ளார். 

இதுதொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாணவி வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பேராசிரியர் சண்முகராஜா கைது செய்யப்பட்டார். 

ஏற்கனவே இந்த பேராசிரியர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சாதி ரீதியாக பேசியதால் பெற்றோர்கள் பேராசிரியர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியது குறிப்பிடத்தக்கது.