Asianet News TamilAsianet News Tamil

Kallazhagar: விண்ணை முட்டும் கோவிந்தா! கோவிந்தா கோஷம்.. பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

madurai kallazhagar steps into-the vaigai river
Author
First Published May 5, 2023, 6:56 AM IST

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2ம் தேதியும்,  3ம் தேதி  தேரோட்டமும் நடைபெற்றது. 

madurai kallazhagar steps into-the vaigai river

தேரோட்டத்தை கண்டுகளிக்க மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனையடுத்து, சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும்  எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

madurai kallazhagar steps into-the vaigai river

இந்நிலையில், இன்று முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதை தொடர்ந்து கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios