Asianet News TamilAsianet News Tamil

ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை..!! ஆன்மீகத் தளம் என்பதால் நீதிமன்றம் அதிரடி..!!

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என மனுதாரரின் மனுவை ஏற்று, டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவு.
 

Madurai high court order to ban to ta smack at rameshwaram because for divine land
Author
Madurai, First Published Nov 25, 2019, 6:19 PM IST

ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "ராமேஸ்வரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீனவ தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். 

Madurai high court order to ban to ta smack at rameshwaram because for divine land

மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாத சாமி கோயிலுக்கு  வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருகின்றனர். மேலும் புண்ணிய தளமாக கருதி மக்கள் ராமேஸ்வரதிற்க்கு வருகை புரிகிறார்கள். தற்போது ராமேஸ்வரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.இது ரமேஸ்வரம் தீவின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையும். எனவே ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்க கூடாது என கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

Madurai high court order to ban to ta smack at rameshwaram because for divine land

எனவே ராமேஸ்வரம் தீவு பகுதியில் அமையவுள்ள அரசு டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என மனுதாரரின் மனுவை ஏற்று, டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவு.

Follow Us:
Download App:
  • android
  • ios