Asianet News TamilAsianet News Tamil

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிர்ச்சி.. ஸ்கேன் எடுப்பதாக கூறி பலான இடத்தில் கை வைத்த மருத்துவர் சஸ்பெண்ட்.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. இங்கு அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 26ம் தேதி அன்று ரேடியாலஜி பரிசோதனைக்கு வந்திருந்தார். அவருக்கு அன்று ஸ்கேன் எடுப்பதில் குறைபாடு இருப்பதாக கூறி மறுநாள் வருமாறு மருத்துவர் அனுப்பியுள்ளார். மறுநாள் 27ம் தேதியன்று இந்த பெண் ஆய்வகத்திற்கு வந்தபோது ஆய்வகத்தில் இருந்த செவிலியரை ரேடியாலஜி மருத்துவர் வெளியே அனுப்பியுள்ளார். 

madurai government hospital sexual harassment...doctor suspended
Author
Madurai, First Published Dec 6, 2021, 2:45 PM IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ரேடியாலஜி துறை மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. இங்கு அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 26ம் தேதி அன்று ரேடியாலஜி பரிசோதனைக்கு வந்திருந்தார். அவருக்கு அன்று ஸ்கேன் எடுப்பதில் குறைபாடு இருப்பதாக கூறி மறுநாள் வருமாறு மருத்துவர் அனுப்பியுள்ளார். மறுநாள் 27ம் தேதியன்று இந்த பெண் ஆய்வகத்திற்கு வந்தபோது ஆய்வகத்தில் இருந்த செவிலியரை ரேடியாலஜி மருத்துவர் வெளியே அனுப்பியுள்ளார். 

madurai government hospital sexual harassment...doctor suspended

ஆனால், பெண்களுக்கு ரேடியாலஜியில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது உடன் ஒரு பெண் செவிலியர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், பரிசோதனை மையத்தில் இருந்த செவிலியரை மருத்துவர் வெளியே அனுப்பி விட்டு உள்ளே அழைத்து சென்றுள்ளார். அழைத்து சென்ற சில நிமிடங்களில் அந்த பெண் கண்ணீருடன் அலறிக்கொண்டு வெளியே வந்தார். அங்கிருந்த தாயாரிடம் மருத்துவர்கள் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தாயார், ரேடியோலஜி துறைத்தலைவர் சுந்தரியிடம் புகார் தெரிவித்தார். 

madurai government hospital sexual harassment...doctor suspended

இந்த விவகாரம் அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் குற்றம் செய்தது உறுதியானது. இதனையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தி இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக பள்ளிகள், மருத்துவமனைகள், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios