தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார் . அதன்படி முதலில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்தார் . பின்னர் கடந்த மாதம் திருநெல்வேலியில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாகவும் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .

 

இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்தார் . இன்னும் பல பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது .

அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் . இது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர் கூறியுள்ளார் .
 

தற்போது புதிய 5 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 37 மாவட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது .