சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரம்... சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது மதுரைக்கிளை!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

madurai bench postponed the hearing on the petition filed by the cbi in satankulam father son murder case

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பைக்கில் படம் எடுக்கும் நாகப்பாம்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ… இணையத்தில் வைரல்!!

இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்ற பத்திரிக்கைகள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்." என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி... புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

அப்போது, சிபிஐ தரப்பில் உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. வழக்கில் சாட்சியங்களை விசாரணை செய்து மேலும் ஒரு குற்ற பத்திரிகை என இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும் சில பிரிவுகளை சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மதுரை மத்திய சிறையில் இருந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி, வழக்கில் போதுமான பிரிவுகள் சேர்க்கப்பட்டு விட்டது. மேலும் பிரிவுகள் சேர்க்க அனுமதிக்க கூடாது. கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி சிபிஐ தரப்பிற்க்கு  எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios