கதிகலங்க வைக்கும் கருப்பு பூஞ்சை... மதுரையில் 50 பேருக்கு தொற்று உறுதி?
வடமாநிலங்களை அச்சுறுத்தி வந்த கருப்பு பூஞ்சை தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் மத்தியில் வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை என்ற நோய் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டில் இல்லாத நீரழிவு நோயாளிகளை கரும்பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் எச்சரித்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படும் என்ற நிலை மாறி, வாரத்திற்கு 10 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாநிலங்களை அச்சுறுத்தி வந்த கருப்பு பூஞ்சை தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் பக்க விளைவாக கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் விரைவில் பூரண நலம் பெற தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும், அதில் 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.