உணவுப் பதப்படுத்துதல் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உணவுப் பதப்படுத்துதல் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் வேளாண் விற்பனை துறையின் கீழ் செயல்பட்டு வந்த உணவுப் பதப்படுத்துதல் தொழில் திட்டமானது, தற்போது மாவட்ட தொழில் மையத்தின் மூலமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமரின் உணவுப் பதப்படுத்துதலுக்கான குறுந்தொழில்கள் (பி.எம்.எப்.எம்.இ.,) நிறுவனத்தின் கீழ் தொழில் தொடங்க விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள், விவசாயம் சார்ந்த உணவுப்பதப்படுத்துதல் தொழில் நுட்பத்தை கையாளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மானிய விவரம்: 

  • பருப்பு, எண்ணெய், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், மாவு தயாரித்தல் தொழில்களுக்கு அதிகபட்சம் ர 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறமுடியும் என்றும், இதில் 35 சதவீத மானியமாக ரூ.10 லட்சம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

இந்த தொழிலைத் தொடங்க வயது தடையில்லை என்றும், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்கள் விரிவாக்கம் செய்வதற்கும், புதிய யூனிட் தொடங்குவதற்கும் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்.

யாருக்கு மானியம் கிடையாது? 

அதேசமயம் ஒருமுறை மானியம் பெற்றிருந்தால் மீண்டும் மானியம் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 

அதன்படி, தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.